Tuesday, June 30, 2026
No menu items!

நீர்ப்பாசன திணைக்களம்

வெள்ள அபாய எச்சரிக்கை! – மக்கள் அவதானம்..!!

களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவதாவது, “நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தைக் கடந்து உயர்ந்து வருவதால், குறித்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் நிலைமை மோசமடையக்கூடும்  என்பதால், பொதுமக்கள்...

பலத்த மழை காரணமாக நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

நாடு முழுவதும் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் பலத்த மழை காரணமாக நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7, அநுராதபுரத்தில் 6, பதுளையில் 5, பொலன்னறுவையில் 3 மற்றும் திருகோணமலையில் 3 நீர்த்தேக்கங்களிலும் நிரம்பி வழிகின்றன. இதேவேளை, மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, சேனநாயக்க சமுத்திரம் மற்றும்...

காலநிலை காரணமாக 20,000 பேர் பாதிப்பு!

இலங்கையில் 2025 ஜனவரி 13 முதல் 21 வரை பதிவான பாதகமான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 02 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 03 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது 228 குடும்பங்களைச் சேர்ந்த 686 பேர் 18 பாதுகாப்பு...

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் திறப்பு!

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கலாவாவிக்கு அதிகளவில் நீர் விடுவிக்கப்படுகிறது. இதன்காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயாவை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், களனி ஆற்றின் பெரும்பாலான நீரேந்தும்...

பல நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. அதேநேரம், நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை…!

சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான...

மகா பருவ பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பம்!

மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 800,200 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு போதுமான நீர் திறந்துவிடப்படும் என அதன் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி லந்தேகும்புர தெரிவித்துள்ளார். இந்த நீரை மகா பருவத்தில் நெல் மற்றும் கூடுதல் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் பாரிய நீர்த்தேக்கங்களின்...

பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது. பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, கம்புருபிட்டிய, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக...

நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று நல்லூரில் ஆரம்பம்..!

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற "நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை...

பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை…!

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரிதுள்ளமையினால் புளத்சிங்ஹல - மில்லஹந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாகுர பகுதியிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img