அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, கம்புருபிட்டிய, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வலா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








