பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இன்று (07)திகதி காலை 10மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பளை மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் மருத்துவ முகாமிற்கு வைத்தியர் திரு அருமைத்துரை மற்றும் நிதி பங்காளர் நலன் விரும்பியினர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.







