களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரிய போரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக  மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில்  அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் இருவரை கைது செய்துள்ள  சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் 3 பேர்  சூட்டி ரக மோட்டார் சைக்கிளில் ஒன்றில் சம்பவ தினமான பகல் 11 மணியளவில் பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பிரயாணித்து கொண்டிருந்த போது  ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி  மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதைனையடுத்து பொலிஸார் பொதுமக்கள் உதவியுடன் நீரிழ் மூழ்கி உயிரிழந்தவரையும் மோட்டர் சைக்கிளையும் மீட்டதுடன் அவருடன் பிரயாணித்த இரு நண்பர்களையும் கைது செய்தனர்.

இதில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்ற  உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here