தெரணியகலவில் சட்ட விரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்களை தெரணியகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தெரணியகல, கொழும்பு, யக்கல, கம்பஹா, அவிசாவளை, பிலியந்தலை, ஜா-எல மற்றும் களுபோவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் தெரணியகல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








