சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

மேலும் பவதாரணியின் உடல் இன்று (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இன்று இரவு10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று (27.02.204)  இறுதி கிரியைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here