பசறை பகுதியில் நேற்று மாலை பாக்குமரத்தின் நுனிப்பகுதியை வெட்டிக் கொண்டிருந்த இளைஞன் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய கல்பொத்தபதன பரமங்கட பசறை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக இளைஞன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தினை வெட்டும் போது தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இந் நிலையில் இளைஞன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here