மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பல முன்னணி நடிகர்கள் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.

சுசி லீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறி உள்ளார்.

ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டிகள் நடத்துவார் என்றும், அதில் பலர் கலந்துகொள்வார்கள் எனவும் சுசித்ரா கூறி இருந்தார்.

இந்நிலையில் ரீமா கல்லிங்கல் தற்போது சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அவர் சொன்னது போல போதை பார்ட்டி எதுவும் தான் நடத்தவில்லை என்றும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் இதுபற்றி புகார் அளித்து இருக்கிறேன் என ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here