இந்தியா, குஜராத், பிபாலியா கிராமத்தில் நேற்று(19)  ஆறு வயது சிறுமியொருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியைத் தேடி அவரது பெற்றோர் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

பாடசாலை மூடியிருந்ததால், உள்ளே ஏறி குதித்து சிறுமியைத் தேடியபோது, பாடசாலையின் பின் பகுதியிலுள்ள சுவருக்கு அருகில், சிறுமி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் மரணத்தை தற்செயலானது என்று பதிவு செய்ததோடு, உடலையும் பிரேத பரிசோதனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரிந்ததும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும் என பொலிஸ் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பாடசாலையைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here