450 கிராம் பாண் ஒன்றினை 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது.
தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தால் பாணை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.








