2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் 2025.09.01 முதல் 2025.12.31 வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை இக்காலப்பகுதியில் மட்டுமே புதுப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பு அமைச்சின் www.defence.lk இணையதளத்தின் மூலம் பெற முடியும்.
செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பது, துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும், 2026/2027 ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுப் புதுப்பித்தலும் 2025.09.01 முதல் 2025.12.31 வரை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.







