நாட்டில் சுமார் 14,834 சிறார்கள் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள், பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் நலனுக்காக பணியாற்றி வருவதாகவும், குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, 15 வயதுச் சிறுவர்கள் கூட பாதாள உலகில் சிக்கிக்கொள்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை தெரிவித்தார்.








