பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுமார் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின்படி, ஊழியர்கள் அவரது பாதுகாப்பு கயிற்றை இணைக்க மறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவம் காணொளியிலும் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here