கந்தப்பளை – கொங்கோடியா பகுதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கந்தப்பளையில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மரக்கறி சேகரித்து ஏற்றச் சென்ற பாரவூர்தி ஒன்றே வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here