புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞ்சாம்பிட்டிய பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு அலி சப்ரி ரஹீம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளதுடன் அவர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான அயோனா விமலரத்ன கடந்த 9 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கல்பிட்டி பொலிஸில் ஆஜராக வந்த போது  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here