இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் காரணமாக காஸாவில் பாரிய பஞ்ச நெருக்கடி உருவாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சத்தைத் தடுக்க உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நிபுணர்களின் அவசர நடவடிக்கைக்கான அழைப்புகள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் கடுமையான அணுகுமுறை காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை கடினமாக்கியுள்ளது.
நிலைமையை ஆய்வு செய்த பின்னர், உணவு நிலைமை குறித்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட குழு, காசா பகுதியில் உள்ள 1.95 மில்லியன் மக்களில் 91 சதவீதம் பேர் “கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை” எதிர்கொள்வதாகக் கூறியது.
345,000 பேர் பஞ்சத்தை எதிர்நோக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் குழு கூறுகிறது.
காசாவின் 68 சதவீத விளைநிலங்களும், 52 சதவீத விவசாயக் கிணறுகளும், 44 சதவீத பசுமைக் குடில் பகுதிகளும் அழிந்துவிட்டதாக ஐநா உணவு நிறுவனம் கூறுகிறது.
காஸா பகுதியில் சுமார் 70 வீதமான மீன்பிடி கப்பல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், அதன் கால்நடைகளில் சுமார் 95 சதவீதம் இறந்துவிட்டன.
தற்போது உலகின் மிக மோசமான மனிதாபிமான அவலத்தை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் 45,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 107,764 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








