Wednesday, June 17, 2026
No menu items!

காஸா

காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!

காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள்...

நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை...

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: 20 சிறார்கள் உட்பட  34 பேர் உயிரிழப்பு !

காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சிறார்கள் அடங்குவதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினையே, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஏதிலிகள் தங்கியிருந்த முகாமுக்கான நீர் விநியோக பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்களமாக மாறிய காஸா!

காஸாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன. காஸா மனிதாபிமான அறக்கட்டளை  மையங்களை நோக்கி  உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மே 27 முதல் காஸா மனிதாபிமான அறக்கட்டளை...

பலஸ்தீன மக்களுக்கு சபையில் ஆதரவு தெரிவித்த ரவூப் ஹக்கீம்!

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (3/21/2025) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு நூதன முறையில் எதிர்ப்பைத்  தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தமை...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

காஸாவிற்கான மின் விநியோகம் நிறுத்தம்..!

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஹமாஸ் தரப்பினருக்கு அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இன்று டோகாவிற்கு ஒரு குழுவை அனுப்புவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மனிதாபிமான நிவாரணங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள்...

ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று பிற நாட்டுத் தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா? -அன்வர் முஸ்தபா

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் இதுபோன்ற பிரச்சினை உள்ள பிரதேசங்களை பற்றி கேள்வி கேட்க அல் ஜசீராவின் ஊடகவியலாளர்  மெஹ்தி ஹசனுக்கு முடியுமா? என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி...

இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை!

இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் நாளை முடிவுக்கு வருகிறது. அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தல் மற்றும் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய...

காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றம் இன்று..!

காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து 183 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காஸாவில் இன்று நான்காவது கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதோடு மூன்று இஸ்ரேலியர்களை இன்று விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் 50 பலஸ்தீனர்கள் எகிப்துடன் மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா வழியாக காசாவை...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img