பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் கல்வெட்டுக்கு அருகில் இன்று (11.08) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள மரண வீடொன்றில் இரவு 11 மணியளவில் இருந்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சடலமாக மீட்கப்பட்ட நபர் மரண வீட்டில் ஏற்பட்ட கைக்கலப்பில் உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதோடு பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், ரிதிமாலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஆர்.வீரகோன தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here