பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” என்பவர் பயாகல பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 03 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தலைமையில் பயாகல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here