பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையணியுடனான கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் தேர்தல்கள் காரணமாக 2024 ஒக்டோபர் 23 முதல் 24 வரை ரஷ்ய கூட்டமைப்பின் கசான் நகரில் நடைபெறவுள்ள அவுட்ரீச் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தானும் ஜனாதிபதியும் கலந்துகொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.000

வெளிவிவகார செயலாளர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவார் மற்றும் இலங்கையின் உறுப்பினர் கோரிக்கையை பதிவு செய்வார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள எனது சகாக்களுக்கு ஆதரவு கோரி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கட்டமைப்பிற்குள் பலப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய பலதரப்புவாதத்தின் ஊடாக, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான அபிலாஷைகளை நனவாக்குவதற்கு BRICS ஒரு பயனுள்ள கூட்டாண்மையாக இலங்கை கருதுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here