பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித பொகொல்லாகம இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்தே உயர்ஸ்தானிகரை இலங்கைக்கு மீள அழைத்துள்ளதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்கமாட்டோம், அரசியல் நியமனங்களை அனுமதிக்கமாட்டோம், தூதுவர், உயர்ஸ்தானிகர்கள் மாத்திரமல்லாமல் தூதரக பணியாளர்கள் பலரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here