யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்.மாவட்டச் செயலகத்தில்  நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

மேலும், இதுவரை பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here