நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here