2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி,
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 51 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 55 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







