படமெடுப்பதற்காக ஓடும் ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த சீன சுற்றுலாப்பயணி ஒருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தனது தலை சுரங்கப்பாதையின் சுவரில் இடித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் சுற்றுலாப்பயணி கீழே விழுந்துள்ளார்.

பெயர் தெரிவிக்க வரும்பாத அந்தப் பெண், நானு ஒயாவிலிருந்து பதுளைக்கு சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவசர சிகிச்சைக்காக காயமடைந்த பெண் ஹப்புதளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் தனிப்பட்ட பராமரிப்புக்காக வேறு இரு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டார்.

அவர் இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ரயிலில் பயணம் செய்யும்போது தங்கள் பாதுகாப்பு கருதி கதவுகளுக்கு அருகில் இருப்பதையும் ரயிலிலிருந்து எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்குமாறு சீனத் தூதரகம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் எச்சரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், இலங்கையில் படமெடுப்பதற்காக ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த ர‌ஷ்ய சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்தார். ஒல்கா பெர்மினோவா என்ற அந்தப் பெண், பாறை மீது மோதி ரயிலிலிருந்து விழுந்து மோசமான காயங்களுக்கு ஆளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here