கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக புகையிரதத்துடன் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திலிருந்து கீனதெனிய புகையிரத கடவையில் வேன் ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சாரதி வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது டிரைவர் மட்டும் வேனில் இருந்துள்ளார். எனினும் வேன் பலத்த சேதமடைந்தது.
ரயில் தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்ட பிறகு ரயில் மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீரிகம பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.






