யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து காலை  6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டர்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அருளானந்தம் பிரபாகரன் 43 வயது உடைய குடும்பஸ்தரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here