புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் இரு தமிழர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தமிழ் அமைச்சர்களாவர்.
கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here