எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
முன்னாள் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
மற்றும் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் மார்ஷல் ஆஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மாகாண நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








