எரிபொருள் விநியோகத்திற்கு புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்தார்.
முறைகேடுகளைத் தடுப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்குமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக, அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் பிரத்தியேக டிஜிட்டல் எரிபொருள் அட்டை வழங்கப்படும் என்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்படும் என்றும் அரசு நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்றும் டொக்டர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள எந்தவொரு CPC (Ceypetco) நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெறலாம் என்றும், இத்திட்டத்தின் ஊடாக, எரிபொருள் விநியோகம் மற்றும் பதிவுகளை வைத்திருப்பதை மிகவும் இலகுவாக்கும் என்றும்
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனித்துவமான அட்டை ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல் எரிபொருள் அட்டை ஊடாக செயல்திறன் மிக்க எரிபொருள் விநியோக கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் எரிபொருள் சீரான பராமரிப்பை மேற்கொள்ளமுடியும் என்றும் டொக்டர் மயூரா நெத்திகுமாரகே மேலும் குறிப்பிட்டிருந்தார்.
#Ceypetco #டிஜிட்டல்_எரிபொருள்_அட்டை #டிஜிட்டல் #எரிபொருள் #அட்டை #மயூரா_நெத்திகுமாரகே #இலங்கை பெற்றோலியக்_கூட்டுத்தாபனம் #இலங்கை #பெற்றோலியக் #கூட்டுத்தாபனம்







