ஈரான் தனது சமீபத்திய 14 அம்ச கோரிக்கை அடங்கிய அறிக்கையை பாகிஸ்தான் மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும், அது அமெரிக்காவிடம் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு நெருக்கமான ஓர் தரப்பு தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் இதனை குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் முந்தைய முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா, சமீபத்தில் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், அது 14 அம்ச வடிவாக காணப்பட்டதாகவும் குறித்த தரப்பு இன்று குறிப்பிட்டுள்ளது.

“சமீபகாலமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறைக்கமைய, ஈரான் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், தனது 14 அம்ச கோரிக்கையை பாகிஸ்தான் மூலம் மீண்டும் சமர்ப்பித்துள்ளது,” என்று அந்த தரப்பு கூறியுள்ளது.

ஈரானின் புதிய கோரிக்கை, “போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here