மத்திய-வலது அரசியல்வாதியான மைக்கேல் பார்னியரை புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கும் இம்மானுவேல் மெக்ரோனின் முடிவுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் 100,000 இற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி புறக்கணித்ததாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும் வலதுசாரி பிரதமரை ஜனாதிபதி நியமித்ததை அதிகார அபகரிப்பு என்று தீவிர இடதுசாரி கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். இதனிடையே பார்னியர் தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தையும் மேற்கொண்டு பாரிஸ் வைத்தியசாலையில் ஊழியர்களையும் சந்தித்துள்ளார்.
“அற்புதங்களைச் செய்யாமல், முன்னேற்றங்களைச் செய்ய முடியும்,” என்று தெளிவான பெரும்பான்மை இல்லாத பார்னியர் செய்தியாளர்களிடம் தனது கருத்தையும் முன்வைத்துள்ளார்.








