நாடு முழுவதும் பத்து புதிய பல்வகை போக்குவரத்து நிலையங்களைக் கொண்ட போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மொரட்டுவை, ராகமை, கடவத்தை, கம்பஹா, மாலம்பே, அத்துருகிரிய, கட்டுநாயக்க மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை மையமாகக் கொண்டு குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கண்டியிலும் காலி மாவட்டத்தின் தெவட்ட பகுதியிலும், மேலும் இரண்டு பல்வகை போக்குவரத்து நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் போக்குவரத்து நிலையத்தில் சுமார் 40 சதவீத மேம்பாடுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மற்ற பல்வகை போக்குவரத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here