பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல்வத்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (18/1/2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 48 வயதுக்கு இடைப்பட்ட  பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here