கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டில் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கடந்த காலபோக நெற்ச்செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.


[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








