தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாகச் சிக்கியிருந்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் உதவியுடன் புளோரிடா கடலில் அவர்கள் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பரிசோதனை நடவடிக்கைக்காக 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் பூமியிலிருந்து பயணமாகினர்.

அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 9 மாத முயற்சியின் பின்னர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று அதிகாலை பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here