வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
காணி விடயம் ஒன்று தொடர்பாகவே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்றைய தினம் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளனர்.
ஜந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலஞ்சம் பெறுதல் தொடர்பில் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கைக்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.







