Tuesday, June 9, 2026
No menu items!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

மன்னார் நகர சபையினால் பண்டிகைக் காலத்திற்கு ஒதுக்கப்பட்ட வியாபார நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி !

மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு  ஒதுக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் இன்றைய தினம்...

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிரடியாக கைது..!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. காணி விடயம் ஒன்று தொடர்பாகவே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டிருப்பதாக...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக நான் தயார் – ரணில்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆஜராகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜான்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், SATO. நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால்...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிபருக்கு விளக்கமறியல்..!

குழந்தை ஒன்றை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20/1/2025) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின்...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி; ஜனாதிபதி!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒருவரின் விருப்பத்திற்கிணங்க பொலிஸ் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சில இடமாற்றங்களில்...

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் முன்னாள் அமைச்சர்கள்-விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமா?

பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்து பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல்...

கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்..!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த மைத்திரி!

கொழும்பு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரினை அரசுடமையாக்க உத்தரவு…!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img