பெண்களால் சாதிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் 30.10.2024 நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

யுத்தத்தால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் குறிப்பாக பெண்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துயரங்கள் ஏராளம்.

இந்த துயரங்களை சுமந்து வாழ்ந்த வந்த மக்களுக்கு ஆபத்துக்கு உதவுவராக வந்து அபயக்கரம் நீட்டியவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

கடந்த கால நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழர் அரசியல் புலத்தில் இருக்கின்ற கட்சிகள் தேசியம் பேசி எமது மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்குகளை அபகரித்து அதிக ஆசனங்களை பெற்று தமது சுகபோகங்களை அனுபவித்தது மட்டுமல்லாது எம்மை நடுவீதிகளில் தவிக்கவிட்டு அந்த அவலத்திலும் அரசியல் செய்து வந்தனர்.

ஆனால் ஈ.பி.டி.பி கட்சி தனக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தை கொண்டு எமது மாவட்டத்தின் அநேக தேவைகளை குறிப்பாக கணவரை இழந்த பெண்களுக்கு மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் குடும்பங்கள் சிறுவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொடுத்து அழிந்து கிடந்த எம் தேசத்தையும் மக்களையும் மீண்டும் எங்களால் புத்தெழுச்சியுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி ஒவ்வொருவரையும் தலைநிமிர வைத்தது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here