பெப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, X இல் ஒரு பதிவில் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் பலத்துடன் அமைச்சர்கள் அமைச்சரவை பிப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்க முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.








