Tuesday, June 9, 2026
No menu items!

வாகன இறக்குமதி

3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்..!

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உருவாகியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார். இது தொட்ர்பில் அவர் கூறுகையில், திட்டமற்ற வாகன இறக்குமதி காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளின்...

8 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை செலவழித்தது  பில்லியனை கடந்தது – மத்திய வங்கி தகவல்!

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் இலங்கை அரசாங்கம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த தகவல், மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பரிவர்த்தனை செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஓகஸ்ட் மாதம்...

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார் வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898...

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்; ஜனாதிபதி!

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – மத்திய வங்கி ஆளுநர் உறுதி!

வாகன இறக்குமதியைக் வரையறுப்பதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும்,...

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பு!

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு...

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு..!

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன இறக்குமதி பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (22/03/2025) நடைபெற்ற...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கீர்த்தி குணரத்ன தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான அனுமதிக்கமைய 2023,...

வாகன இறக்குமதியில் சிக்கல்..!

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத்...

புதிய வாகனங்களுக்கான விலைகளை அறிவித்த லங்கா பிஎல்சி!

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. மாற்று விகிதம், தீர்வைகள் மற்றும் வரிகளில் ஏற்ற இறக்கங்களுக்கு அமைய இந்த விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மிட்சுபிஷி அட்ரேஜ் (Mitsubishi Attrage) 11.23 மில்லியன் ரூபாய். மிட்சுபிஷி எக்ஸ்பாண்டரின் (Mitsubishi Xpander) விலை 14.99...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img