இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இன்றையதினம் (02.01.2024) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை – தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், 23 கிலோ 165 கிராம் கஞ்சாவுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இருவரும் சான்றுப்பொருட்களுடன் பளை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








