பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு 9 பேரை சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








