பேர வாவியை சுத்தம் செய்யும் செயல்முறையை மேற்பார்வையிடவும், அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் குழுவில் 12 நிபுணர்கள் அடங்குவதாகவும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பேர வாவியை சுத்தம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முந்தைய திட்டங்கள் வெற்றிகரமான பலனைத் தரவில்லை எனவும் கொழும்பில் உள்ள 21 கழிவுநீர் கால்வாய்கள், நான்கு பெரிய கால்வாய்கள் பேர வாவியில் கலப்பதால் இந்த ஆண்டுக்குள் இதை நிறுத்த திட்டங்கள் பல உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்தை குறித்த குழு தயாரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.








