நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு இன்று வெள்ளிக்கிழமை (14/02/2025) காலை மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (14/02/2025) முதல் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.








