பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பேலியகொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here