பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஒய்வுபெற்ற ஆசிரியருமான கிரிஷாந்த புலஸ்தி என்பவர் கொஸ்ஸின்ன என்ற இடத்திலுள்ள வீட்டில் நேற்று (28) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது கைகள் கட்டப்பட்டு, வாயக்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அவர் அணிந்திருந்த சாரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் மின்சாரம் செயலிழந்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது மனைவியின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுக் காயங்களுடன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த அலுமாரிகள் திறந்திருந்ததாகவும் காணாமல் போன பொருட்கள் குறித்த தகவல்கள் அவரது மனைவியின் மூலமே பெற முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலம் கேகாலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் வீட்டிலிருந்த காரை எடுத்து சென்றுள்ளதுடன் குறித்த கார் கேகாலை பிந்தெனிய என்ற இடத்தில் விட்டுசென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here