பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் சட்டங்களுக்கு எதிராக செயற்படாத பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here