நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.







