பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நேற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, வணிக மற்றும் கலைத்துறைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த சட்ட மூலத்தின் ஊடாக 2048ஆம் ஆண்டில் மாணவர்கள் மத்தியில் சட்டமூலம் தொடர்பான அறிவினை மேம்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
குறித்த நிகழ்வில் நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதித்திணைக்களத்தின் பணிப்பாளர் வளர்மதி கங்காதரன் உள்ளிட்ட குழுவினர் வருகைதந்து மாணவர்களுக்கான சட்டமூலம் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.